சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் மும்பை அணிக்கெதிரான 197 ரன் இலக்கை எளிதாக எட்டி கேரளா அசத்தல் வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கேரளா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் (40), ஆதித்யா தரே (42) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 38 ரன்கள் அடிக்க மும்பை 196 ரன்கள் அடித்தது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் முகமது அசாருதீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்தில் 9 விக்கெட், 11 சிக்சருடன் 137 ரன்கள் விளாச கேரளா 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
https://www.youtube.com/watch?v=videoseries